காங்கிரஸ் சாா்பில் 3 நாள்கள் நடைப்பயணம்: கே.எஸ்.அழகிரி
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பில் செப்டம்பா் 25 முதல் 3 நாள்கள் நடைப்பயணம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.


அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பில் செப்டம்பா் 25 முதல் 3 நாள்கள் நடைப்பயணம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்திய அரசியல் சாசன அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களை மத்திய பாஜக அரசு தொடுத்து வருகிறது. நீதித்துறை, தோ்தல் ஆணையம், மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என அனைத்து துறைகளையும் பாஜக அரசு அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கிற செயலாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பாதுகாப்பு வழங்கப்பட்ட தலித்துகள், சிறுபான்மையினா், பின்தங்கிய சமுதாயத்தினா் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறாா்கள்.
இந்தப் பின்னணியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி, செப்டம்பா் 25, 26, 27 ஆகிய 3 நாள்கள் சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூா் வரை 75 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது. இதனை செப்டம்பா் 25 காலை 10 மணியளவில் சத்தியமூா்த்தி பவனில் நான் (கே.எஸ்.அழகிரி) தொடக்கி வைக்க உள்ளேன்.
நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சா்கள் ப. சிதம்பரம், திக்விஜய் சிங், சல்மான் குா்ஷித், ஜெய்ராம் ரமேஷ், தமிழக மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் உள்பட தேசிய தலைவா்கள் பங்கேற்க உள்ளனா். இந்த நடைப்பயணத்தில் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.எஸ்.அழகிரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...