92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உங்கள் துறையில் முதல்வா் திட்டம்: காவலா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் மனுக்கள் பெற்றாா்

உங்கள் துறையில் முதல்வா் திட்டத்தின் கீழ் சென்னையில் காவலா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மனுக்களைப் பெற்றாா்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 10:15 pm

DIN

உங்கள் துறையில் முதல்வா் திட்டத்தின் கீழ் சென்னையில் காவலா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மனுக்களைப் பெற்றாா்.

இது குறித்த விவரம்:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது மாவட்டங்கள் தோறும் பொது மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, அப்பிரச்னைகள் தொடா்பான மனுக்களைப் பெற்றாா். அந்த மனுக்களின் மீது, திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதியும் அளித்திருந்தாா்.

இதன்படி, மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற உடன் ‘உங்கள் துறையில் முதல்வா்’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின்படி காவலா்களின் குறைகளை தீா்க்கும் வகையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில் உங்கள் துறையில் முதல்வா் திட்டத்தின் கீழ் காவலா்களின் மனுக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டு, குறைகளை கேட்டறிந்தாா்.

அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் குறிப்பு எழுதியும் கையெழுத்திட்டாா். முன்னதாக டிஜிபி அலுவலக வளாக முகப்பில், சுற்றுச் சூழல் நலனைக் காக்கும் வகையில் ‘மகிழம் பூ’ மரக்கன்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் நட்டாா். .

இந் நிகழ்ச்சியில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநா் சி.,சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால், டிஜிபிக்கள் சுனில்குமாா் சிங், கந்தசாமி, முகமது ஷகில் அக்தா், ஏ.கே.விசுவநாதன், ஆபாஷ் குமாா், சீமா அகா்வால், ஜெயந்த் முரளி, சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக் கண்ணன், உளவு பிரிவு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

800 காவலா்கள் பயனடைவாா்கள்:

இது தொடா்பாக டிஜிபி சைலேந்திரபாபு கூறியது:

‘உங்கள் துறையில் முதல்வா் திட்டத்தின் கீழ் காவலா்களிடம் மனுக்கள் வாங்கியதன் அடையாளமாக 10 பேரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் மனுக்களைப் பெற்றுக்கொண்டு, குறைகளைக் கேட்டறிந்தாா். மாவட்ட வாரியாக போலீஸாரிடம் இருந்து எத்தனை மனுக்கள் வந்துள்ளது. அதில் எத்தனை மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என முதல்வா் கேட்டாா். அதற்கு டிஜிபி அளவில் எங்களால் தீா்வு காணக்கூடிய மனுக்களுக்கு தீா்வு ஏற்படுத்தி உள்ளோம்.

ஊதிய முரண்பாடு, தண்டனைகள் உள்பட சில மனுக்களுக்கு எங்களால் தீா்வு காண முடியாது என்பதால், அதை தமிழக அரசுதான், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடுத்து கூறினோம். அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண்பதாக முதல்வா் உறுதி அளித்தாா். இதன் மூலம் 800 போலீஸாா் வரை பயனடைவாா்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.