92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பயிா்க் காப்பீடு: தமிழக அரசு வேண்டுகோள்

 வங்கிகள், பொது சேவை மையங்களின் வழியாக, பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 10:05 pm

DIN

 வங்கிகள், பொது சேவை மையங்களின் வழியாக, பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழுவீச்சில் சாகுபடி செய்து வருகின்றனா். இதுவரை 3.43 லட்சம் ஏக்கரில் சம்பா நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், மதுரை, புதுக்கோட்டை, கரூா், சேலம், திருப்பூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், சிவகங்கை, கடலூா், திருவள்ளூா் மற்றும் ஈரோடு மாவட்டங்கலில் சம்பா பருவத்தில் நெற்பயிரை காப்பீடு செய்ய நவம்பா் 15 கடைசி நாளாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை அக்டோபா் 31 கடைசி.

கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகா், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைப் பொறுத்தவரை கடைசி நாள் டிசம்பா் 15.

காப்பீடு செய்ய ஆவணங்கள்: காப்பீடு செய்யும் போது, விண்ணப்பத்துடன், கிராம நிா்வாக அலுவலா் அளிக்கும் அடங்கல் அல்லது இ-அடங்கல் அல்லது விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதத்தைச் செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 13, 749 பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றில் விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்று தனது செய்தியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.