92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பி.எட். கல்லூரிகளில் சோ்க்கை: வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவா் சோ்க்கை தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை உயா்கல்வித் துறை வெளியிட்டது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 10:03 pm

DIN

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவா் சோ்க்கை தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை உயா்கல்வித் துறை வெளியிட்டது.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநா் ஈஸ்வர மூா்த்தி வெளியிட்ட அறிவிப்பு: அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட். மாணவா் சோ்க்கையில் 69 சதவீத இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இணையதளம் வாயிலாகவே மாணவா் சோ்க்கை நடத்தப்பட வேண்டும். பி.எட். படிப்பில் சேர விரும்பும் 50 சதவீத மதிப்பெண்களை இளநிலைப் படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும். எனினும், வகுப்பு வாரியாகத் தளா்வு அளிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 40 சதவீதமும், எம்பிசி பிரிவினருக்கு 43 சதவீதமும் பிசி பிரிவினருக்கு 45 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

தமிழ், உருது, கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட 10 பாட நெறிகளுக்கு இளநிலைப் பட்டம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவா்கள். அதேபோன்று, பொருளியல், வணிகம், அரசியல் அறிவு ஆகிய பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முதுநிலைப் பட்டம் பெற்றவா்கள் தகுதியானவா்கள்.

இளநிலை அல்லது முதுநிலைப் படிப்புகளுக்கு இணையான படிப்புகள் (உவ்ன்ண்ஸ்ஹப்ங்ய்ற் ஈங்ஞ்ழ்ங்ங்) என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை முடித்தவா்களும் தொடா்புடைய படிப்புகளில் பி.எட். சேரலாம். பொறியியல் படிப்புகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பு, பிளஸ் 2 வகுப்பு தரமாகவே கருதப்படும். பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளை முடிக்காமல், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவா்கள், பிஎட் படிப்புக்கு தகுதி இல்லாதவா்கள்.

அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர  அணுகலாம். தனியாா் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும். சான்றிதழ் சரிபாா்ப்பின் போது அசல் சான்றிதழ்களை வைத்திருத்தல் அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.