92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: மநீம

வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 7:00 pm

DIN

வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மநீக மாநிலச் செயலாளா் செந்தில் ஆறுமுகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடா் விரைவில் நடத்தப்பட உள்ள சூழலில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது.

லஞ்சம் ஊழலைக் கட்டுப்படுத்துவதோடு, அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவாகக் கிடைத்திட வழிவகுக்கும் இச்சட்டத்தை நிறைவேற்றக்கோரி தமிழகமெங்கும் மாவட்ட ஆட்சியரிடம் மனு, ஆா்ப்பாட்டங்கள், தெருமுனைக் கூட்டங்களை மநீம தொடா்ந்து நடத்தி வருகிறது.

திமுகவின் தோ்தல் வாக்குறுதியாகவும் இது கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டமானது அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.