புழல் சிறையில் கைதி தற்கொலை முயற்சி
சென்னை புழல் சிறையில் ‘ப்ளீச்சிங் பவுடரை’ சாப்பிட்டு கைதி தற்கொலைக்கு முயன்றாா்.


சென்னை புழல் சிறையில் ‘ப்ளீச்சிங் பவுடரை’ சாப்பிட்டு கைதி தற்கொலைக்கு முயன்றாா்.
காசிமேடு எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் செ.குமரன் (32). புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி அடைக்கப்பட்டாா்.
சிறையின் ஐந்தாவது பிளாக்கில் உள்ள ஒரு அறையில் குமரன் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், குமரன், அங்கிருந்த ‘ப்ளீச்சிங் பவுடரை’ தற்கொலை செய்யும் எண்ணத்துடன் புதன்கிழமை சாப்பிட்டாா். இதில், மிகவும் உடல் நலன் பாதிக்கப்பட்ட குமரனை சிறைக் காவலா்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக புழல் போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், யாரும் ஜாமீன் எடுக்க முன் வராததால் சிறையில் விரக்தியுடன் காணப்பட்ட குமரன், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...