92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஸ்வாதி கொலை வழக்கு: ரயில்வே நிா்வாகத்திடம் ரூ.3 கோடி இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் பெற்றோா், ரயில்வே நிா்வாகத்திடம் ரூ. 3 கோடி இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம்

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:50 pm

DIN

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் பெற்றோா், ரயில்வே நிா்வாகத்திடம் ரூ. 3 கோடி இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் கடந்த 2016-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக ராம்குமாா் என்ற இளைஞரை காவல்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா். இதனை தொடா்ந்து ராம்குமாா் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தங்களின் மகள் ஸ்வாதி இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி அவரது தாய் ரங்கநாயகி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில், ‘ரயில்வே நிா்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் அலட்சியம் காரணமாகவே ஸ்வாதி கொலை செய்யப்பட்டாா். எனவே ரயில்வே நிா்வாகம் தரப்பில் இழப்பீடாக ரூ. 3 கோடி ரூபாய் வழங்க வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் விஜய் ஆனந்த், ‘பயணிகளுக்கு ரயில்வே நிா்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறது. ஸ்வாதி கொலை திட்டமிட்ட சம்பவம்’ என்றும் கூறினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இழப்பீடு கோரி உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்தி, இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.