
கொளத்தூர் சந்தைக்கு பருத்தி வரத்து குறைந்தாலும் இடைத்தரகர்கள் தலையிடு காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கொளத்தூரில் பருத்தி ஏலம் நடைபெறும். ஒழுகுமுறை விற்பனை கூடம் மூலம் இந்த ஏலம் நடத்தப்படுகிறது.
கொளத்தூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் ஏரியூர் பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கொளத்தூருக்கு பருத்தி கொண்டு வருவது வழக்கம்.
கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பருத்தி ஏலத்தில் பங்கு பெறுவார்கள். மாழையின் காரணமாக பருத்திவரத்து குறைந்தது. பருத்தி வரத்து குறைந்தாலும் இடைத்தரகர்கள் தலையிடு காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் முதல் தர பருத்தி கிலோ ரூ.110க்கு விற்பனையானது. ஆனால் இன்று அதிகபட்சம் ஒரு கிலோ ரூ.80க்கு மட்டுமே விலை போனது.
இதையும் படிக்க | முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்: அண்ணமாலை உதவியாளர் கைது
வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்காமல் இடைத்தரகர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்கின்றனர். இடைத்தரகர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு விலையை குறைத்து கூறுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பருத்தி விலை குறைவால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இன்று சுமார் 1000 மூட்டை பருத்திகள் மட்டுமே விற்பனைக்கு வந்தது ரூ.10 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. உலகமாக அதிகபட்சம் ரூ 50 லட்சம் வரை வர்த்தகம் நடைபெறும் கொளத்தூர் பருத்தி ஏலத்தில் இன்று ரூ.10. லட்சத்திற்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.