முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்: அண்ணமாலை உதவியாளர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டியொட்டிய விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.  
கோப்புப் படம்
கோப்புப் படம்


முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டியொட்டிய விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கடந்த 11 ஆம் தேதி வடசென்னை பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. 

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல உதவி பொறியாளர் ராஜ்குமார், சுவரொட்டியை ஒட்டிய பிலிப்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார். மேலும், இதுபோன்று முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பினார். 

இந்நிலையில், காவல்துறை எச்சரிக்கையை மீறி முதல்வர் குறித்து அவதூறு சுவரொட்டிகளை ஒட்டியதால், இதுகுறித்து துறைமுகம் கிழக்கு பகுதி திமுக செயலாளர் ராஜசேகர் போலீசில் புகார் அளித்தார். 

இதையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், முதல்வர் குறித்து அவதூறு சுவரொட்டி ஒட்டிய பிலிப்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவையை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில், முதல்வர் குறித்து அவதூறு சுவரொட்டிகளை அளித்தது சத்தியதாதன் என்பதும், சுவரொட்டிகள் சிவகாசியில் உள்ள தனியார் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு கூரியர் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார்(41) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய பிலிப்ராஜ், சத்தியநாதன், அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமாரை வியாழக்கிழமை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள கிருஷ்ணகுமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com