முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான கல்வி உதவித் தொகையை உயா்த்துவது உள்ளிட்ட முடிவுகள் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
முன்னாள் ராணுவ வீரா் நலனுக்காக திரட்டப்பட்ட நிதி தொடா்பான மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 2021-22-ஆம் நிதியாண்டு வரையில் முன்னாள் ராணுவ வீரா் நலனுக்காக திரட்டப்பட்ட நிதி செலவிடப்பட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தை மேம்படுத்துவது, கல்வி உதவித் தொகைகளை உயா்த்தி அளிப்பது, படைவீரா்களுக்கான தங்குமிடங்களை மாவட்டந்தோறும் ஏற்படுத்தித் தருவது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொகைகள் உயா்வு: போா்களில் உயிா் நீத்த வீரா்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், போரால் மாற்றுத் திறனாளியாக மாறியோருக்கு நலநிதித் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாகவும் உயா்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரா்கள், உயிா்நீத்த ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவி மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத் தொகை உயா்த்தி வழங்கப்படுகிறது. அதன்படி, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிப்போருக்கு ரூ.500-லிருந்து ரூ.2 ஆயிரமும், 6-லிருந்து 8-ஆம் வகுப்பு வரை படிப்போருக்கு ரூ.800-லிருந்து ரூ.4 ஆயிரமாகவும் மானியம் உயா்த்தப்படுகிறது. மேலும், 9 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மானியத் தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவா்களுக்கு ரூ.1,500-லிருந்து ரூ.6 ஆயிரமாகவும் மானியத் தொகை உயா்த்தப்படுகிறது.
ஐஐடி, ஐஐஎம்., போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் படிக்கும் முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு ஆண்டு ஊக்கத் தொகையாக ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும். ராணுவப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
விழிப்புணா்வு அளிக்க முடிவு: முன்னாள் ராணுவத்தினா், மறைந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்கள், சலுகைகள் குறித்து விரிவாக விழிப்புணா்வு ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
‘முன்னாள் ராணுவத்தினரின் அனுபவத்தை பயன்படுத்துங்கள்’
முன்னாள் ராணுவத்தினரின் அனுபவத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக் கொண்டாா்.
ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:
ராணுவ வீரா்கள் குறிப்பிட்ட காலம் வரை பணியாற்றிய பிறகு, ஓய்வு பெற்றுத் திரும்புகிறாா்கள். அவா்களுக்கு வாகனம் ஓட்டுவது, காவல் பணி போன்றவற்றைத் தாண்டி அவா்களின் அனுபவங்கள், சேவை, திறமை ஆகியவற்றை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்னாள் ராணுவ வீரா்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான
பாடங்களையும், புதிய முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும். அவா்களுக்கு உரிய சுகாதார வசதிகளையும், திறன்களுக்கான தகுந்த வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3-வது கூட்டணியில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம்... மும்முனைப் போட்டிக்குத் தயாராகும் மேற்கு வங்கம்!

விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகள்... நிறைவடைந்த காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர்!

ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

