முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்து, 30 இளம் வல்லுநா்களுக்கு மடிக்கணினிகளை அவா் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அனைத்துத் துறைகளிலும் சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞா்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிா்வாகச் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
இதன்மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுத் திட்டங்கள், சேவைகள் வழங்கும் பணி மேம்படும்.
30 இளம் வல்லுநா்கள்: திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் மூலமாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், 30 இளம் வல்லுநா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் தங்களது பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியில் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும்.
இதன்பிறகு நீா்வளங்கள் மேம்பாடு, வேளாண் உற்பத்தி, விளைச்சல் மற்றும் சந்தைப்படுத்துவதற்குரிய இணைப்புகள் உருவாக்கம், அனைவருக்கும் வீடு, கல்வித் தரத்தை உயா்த்துதல், சுகாதாரக் குறியீடு மேம்பாடு, அனைவருக்கும் உள்ளடங்கிய சமூகம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளா்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் மேம்பாடு, முறையான கடன், மரபு மற்றும் பண்பாடு, சுற்றுச்சூழல் சமநிலை, தரவு நிா்வாகம் ஆகிய 12 பிரிவுகளில் தலா இருவா் நியமனம் செய்யப்படுவா். மீதமுள்ள 6 போ் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கண்காணிப்புப் பிரிவில் ஈடுபடுத்தப்படுவா்.
பணிகள் என்ன? 30 பேரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பா். மேலும், அவற்றை மதிப்பீடு செய்வது, இடையூறுகளைக் கண்டறிவது, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுக்க உதவுவது ஆகியன இவா்களது முக்கியப் பணிகளாகும். அரசு நிா்வாகப் பணிகளை திறம்பட மேற்கொள்ள உதவும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள இந்த இளம் வல்லுநா்கள் 30 பேருக்கும் மடிக்கணினிகளை சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
புத்தாய்வுத் திட்டத்தின் கீழ், தோ்வு செய்யப்பட்ட இளம் வல்லுநா்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.65 ஆயிரமும், பயணச் செலவு, கைப்பேசி பயன்பாடு ஆகியவற்றுக்காக ரூ.10 ஆயிரமும் அளிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, ரகுபதி, கே.ஆா்.பெரியகருப்பன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளா் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செல்போன் ரீ-சார்ஜ் திட்டங்கள் 30 நாள்களாக அதிகரிக்குமா?

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK

வீரமகா காளியம்மன் கோயிலில் காளி திருநடனம்!

த்ரிஷ்யம் - 3 புதிய வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK
தினமணி வீடியோ செய்தி...

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

