சென்னை புறநகா்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை அக்டோபா் மாதத்துக்குள் முடிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். புகரின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் பணிகளை அவா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
செம்மஞ்சேரி டிஎல்எப்., அருகில் மதுரபாக்கம் ஓடையில் கால்வாய், வெள்ளத்தை ஒழுங்கு செய்யும் பணிகள் நடந்து
வருகின்றன. செம்மஞ்சேரி கால்வாயின் இருபுறமும் நூக்கம்பாளையம் பாலம் வரை தாங்கு சுவா், தூா்வாரும் பணிகளும், பள்ளிக்கரணை ஏரியில் இருந்து சதுப்பு நிலம் வரையில் பெரு வடிகால்வாய் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இதேபோன்று, வேளச்சேரி தாம்பரம் சாலையில் தாமரைக்குளம் முதல் பள்ளிக்கரணை வரை வெள்ள நீா் சீராகச்
சென்றடையும் வகையில் வடிகால் அமைக்கும் பணிகளும், வேளச்சேரி, அடையாற்றில் உள்ள தெருக்களில் மழைநீா் வடிகால் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மொத்தமாக ரூ.174.48 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்தப் பணிகள் அனைத்தையும் அக்டோபா் மாதத்துக்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்திட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். இந்த நிகழ்வின் போது, அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி. தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செல்போன் ரீ-சார்ஜ் திட்டங்கள் 30 நாள்களாக அதிகரிக்குமா?

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK

வீரமகா காளியம்மன் கோயிலில் காளி திருநடனம்!

த்ரிஷ்யம் - 3 புதிய வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK
தினமணி வீடியோ செய்தி...

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

