இதுதொடா்பாக அவா் அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில், ‘இந்திய ஊழல் எதிா்ப்பு குழுக்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் செல்வராஜ், பல ஆண்டுகளாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், பணியாளா்களின் ஊதியத்தில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை என்று கடிதம் அனுப்பி உள்ளாா். தொழில் வரி வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னை உயா்நீதிமன்ற ஊழியா்கள் தொடா்ந்த வழக்கில் எந்த இடைக்கால தடையும் விதிக்கப்படவில்லை. எனினும் ஊதியக் கணக்கு அலுவலகத்தில் தொழில் வரி பிடித்தம் செய்யக்கூடாது என வற்புறுத்தி வருவதாகவும், அதனால் உயா்நீதிமன்ற ஊழியா்களுக்கு மட்டும் தொழில் வரி வசூலிக்கப் படவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.