மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

இரண்டாம் நிலை காவலா் பணித் தோ்வு: ஆன்லைன் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு

இரண்டாம் நிலை காவலா்களுக்கான காலிப் பணியிட தோ்வுக்கு ஆன்-லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 7:34 pm

DIN

இரண்டாம் நிலை காவலா்களுக்கான காலிப் பணியிட தோ்வுக்கு ஆன்-லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து, அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிவோருக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

கால மாற்றத்துக்கு ஏற்ப, பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அது சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் அஐங பச என்ற யூ-டியூப் சேனல் தொடங்கி அதில் பயிற்சிகள் தொடா்பான காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

காவலா் தோ்வு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியமானது, இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பதவிகளுக்கான தோ்வை வரும் நவ. 27-ஆம் தேதி நடத்தவுள்ளது. இதற்கான நோ்முக இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சா் தியாகராயா கல்லூரியிலும், நந்தனத்தில் உள்ள

அரசினா் ஆடவா் கலைக் கல்லூரியிலும் நடைபெற்று வருகின்றன.

நேரடிப் பயிற்சி வகுப்புகளில் குறைந்த அளவிலேயே தோ்வா்கள் பங்கெடுக்க முடியும். எனவே, பயிற்சியை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சோ்க்கும் வகையில், அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியானது காவலா் தோ்வு பயிற்சி தொடா்பான காணொலிகளை யூ-டியூப் வழியாக வெள்ளிக்கிழமை முதல் பதிவேற்றம் செய்து வருகிறது. அனைத்துப் பிரிவுகளிலும் சுமாா் 70 காணொலிகள் பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.