கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனி திருவிழா: வெண்ணைத்தாழி உற்சவம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு வெண்ணைத்தாழி உற்சவம்,செவ்வாய்க்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.

News image

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ராஜகோபுரம்

Updated On :5 ஏப்ரல் 2022, 3:01 pm IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு வெண்ணைத்தாழி உற்சவம்,செவ்வாய்க்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.

ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 18 நாள் பங்குனித் திருவிழாவும்,அதனை தொடர்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறும். நிகழாண்டின் திருவிழா கடந்த மார்ச்.21-ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வெண்ணைய் தாழி திருவிழாவினை முன்னிட்டு உற்சவர் ராஜகோபாலசுவாமி மீது வெண்ணையை தெளித்து வழிப்படும் பக்தர்கள்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வெண்ணைய் தாழி திருவிழாவினை முன்னிட்டு உற்சவர் ராஜகோபாலசுவாமி மீது வெண்ணையை தெளித்து வழிப்படும் பக்தர்கள்

இதில் முக்கிய நிகழ்வுகளான வெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜ அலங்கார சேவை,கோவர்த்தனகிரியில் கண்ணன் திருக்கோலம், மரவுரிராமர் திருக்கோலம், கணடபேரண்ட பட்க்ஷிவாகனம்,வண்ண புஷ்ப பல்லக்கு சேவை, தங்க சூர்யபிரபை ஆகியவை நடைபெற்றது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ராஜகோபுரம்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ராஜகோபுரம்

16-ம் நாள் திருவிழாவான, இன்று செவ்வாய்க்கிழமை வெண்ணைத்தாழி உற்சவத்தை முன்னிட்டு காலையில் சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, திருக்கோயிலின் நான்கு வீதிகள், மேலராஜவீதி, பெரியக்கடைதெரு, பந்தலடி வழியாக வெண்ணைத்தாழி மண்டபம் சென்றடைந்தார்.

அப்போது சாலையில் இருபக்கங்களிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி மீது வெண்ணையை தெளித்து,கோபாலா,கோபாலா என பக்தி கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர்.

Story image

நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதன்கிழமை ருக்மணி, சத்யபாமா சமேதராக உற்சவர் ராஜகோபாலவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளும் கோயிலில் வெளிபிரகாரத் தேரோட்டம் மதியம் 2மணிக்கு நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.