மாநிலங்கள் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டுமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

மாநில சுயாட்சிக்காக மாநில அரசுகள் ஒன்றிணைந்து குழு அமைத்து போராட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 
மாநிலங்கள் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டுமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

மாநில சுயாட்சிக்காக மாநில அரசுகள் ஒன்றிணைந்து குழு அமைத்து போராட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநில மாநாடு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கண்ணூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என அக்கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இதனை ஏற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிவிமானம் மூலம் சென்னையிலிருந்து  புறப்பட்டு கண்ணூர் சென்றார். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டில் மத்திய-மாநில உறவுகள் எனும் தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "அரசியலமைப்பு சட்ட வரம்பைக் கடந்து அதிகாரத்தை பாஜக விரித்து செல்கிறது. பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தில் கூட தன்னாட்சி ஆட்சி முறை தான் வழங்கினர். ஆங்கில ஆட்சி கூட செய்யாததை இன்றைய பாஜக அரசு செய்கிறது. கேரள முதல்வரும், நானும் போராடுவது வெறும் மாநிலங்களுக்கு மட்டும் அல்ல. திட்டக்குழு, தேசிய வளர்ச்சிக்குழு, ரயில்வே தனி பட்ஜெட் என அனைத்தையும் ஒன்றிய அரசு கலைத்துவிட்டது. நாடாளுமன்றத்திலும் விவாதம் நடத்துவது கிடையாது.

ஜனநாயகத்தை மரணிக்க வைப்பவர்களாக ஆளுநர்கள் நடந்து கொள்கின்றனர். இன்றைக்கு தமிழ்நாட்டின் முதல்வராக நான் இருந்தாலும், கேரள முதல்வராக பினராயி விஜயன் இருந்தாலும் மத்திய அரசுக்கு தலையாட்டி பொம்மையாக இருந்தால் ஆட்சிக்கு சிக்கல் இல்லை. தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

"மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து நாம் போராட வேண்டும். தென்மாநிலங்களின் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதற்கு அரசியல் எல்லைகளைக் கடந்து நாம் ஒன்றிணைய வேண்டும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com