மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சேலத்தில் பீஸ்ட் திரைப்படம் அதிகாலை வெளியீடு: ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

சேலத்தில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

சேலம் ஏ. ஆர். ஆர். எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கின் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜய்  ரசிகர்கள். 

Published On :

சேலத்தில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் நடித்து வெளிவந்த பீட்ஸ் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 இடங்களில் இந்த திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஏ. ஆர். ஆர். எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கின் ஐந்து திரையரங்குகளிலும் பீட்ஸ் திரைப்படம் இன்று புதன்கிழமை அதிகாலை திரையிடப்பட்டது.

Story image

சேலம் ஏ. ஆர். ஆர். எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் பீஸ்ட் திரைப்படம்.

நடிகர் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் இன்று வெளியாவதை யொட்டி இரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு குவியத் தொடங்கினர். அதிகாலை 3 மணிக்கு முதல் காட்சி தொடங்கியதும் தியேட்டர் முன்பு காத்திருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் தியேட்டருக்குள் நடிகர் விஜய் படம் திரையிட்டபோது ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் விண்ணை பிளந்தது விஜய் வரும் ஒவ்வொரு சீனிலும் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Story image

சேலத்தில் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜய்  ரசிகர்கள். 

இதேபோல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று விஜய் நடித்து வெளிவந்த பீட்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு விஜய் படம் வெளியான மகிழ்ச்சியில் ரசிகர்கள் ஆங்காங்கே தங்களது மகிழ்ச்சியை பகிரும் வகையில் கேக் வெட்டி இணைப்பில் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.