இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகான தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தேனாம்பேட்டையிலிருந்து - சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளை அண்ணாசாலையுடன் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தி.நகர், பாண்டிபஜார் பகுதிகளை இணைக்கும் தியாகராயா சாலை சந்திப்பு, டி.டி.கே சாலையை அண்ணாசாலையுடன் இணைக்கும் எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு. செனடாஃப் சந்திப்பு, கோட்டூர்புரம், போட்கிளப், பசுமைச் சாலை வழிச்சாலை வெங்கட்நாராயணச் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலையை வந்தடையும் சென்னை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான நந்தனம் சந்திப்பு. தி.நகர் நிலையம், உஸ்மான் சாலைகளை இணைக்கும் சிஐடி நகர் மூன்றாவது மற்றும் முதல் பிரதானச் சாலை சந்திப்பு, சைதாப்பேட்டையிலுள்ள தாடண்டர் நகர் - ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றை கடக்கும் வகையில் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 3.20 கி.மீ நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை ரூபாய் 485 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.