திருமலைக்கு வருவோர் பயணத்தை தள்ளி வைக்க தேவஸ்தானம் வேண்டுகோள்

கூட்ட நெரிசல் காரணமாக, திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்கள் பயணத்தை சிறிது தள்ளி வைக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருமலைக்கு வருவோர் பயணத்தை தள்ளி வைக்க தேவஸ்தானம் வேண்டுகோள்
திருமலைக்கு வருவோர் பயணத்தை தள்ளி வைக்க தேவஸ்தானம் வேண்டுகோள்

கூட்ட நெரிசல் காரணமாக, திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்கள் பயணத்தை சிறிது தள்ளி வைக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருமலையில் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளதால் தரிசன வரிசையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நேற்று பெண் பக்தா் காயமடைந்தாா். பாதுகாவலர்கள் கடும் முயற்சி எடுத்து கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தினர்.

இன்று முதல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

கடந்த வார இறுதி விடுமுறை நாள்களின்போது திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த தரிசன டோக்கன்களின் முன்பதிவு மூலம் பக்தா்கள் 4 நாள்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து தேவஸ்தானம் புதன்கிழமை (ஏப். 13) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது. பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. புரோட்டோகால் விஐபிகளுக்கு மட்டும் தரிசன அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சா்வ தரிசன டோக்கன்களும் ரத்து:

திருமலையில் பக்தா்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதால் தேவஸ்தானம் திருப்பதியில் அளித்து வந்த இலவச சா்வ தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தா்கள் டோக்கன்கள், தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

அதனால் காத்திருப்பு அறைகளைத் தாண்டி பக்தா்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் பலமணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தரிசன நேரம் பல மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்கள் பயணத்தை சிறிது தள்ளி வைக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

தள்ளுமுள்ளு:

தரிசன டோக்கன்கள் இல்லாமல் பக்தா்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதால், செவ்வாய்க்கிழமை தரிசன வரிசையில் ஒருவரை ஒருவா் முந்திச் செல்ல முயன்றனா். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பெண் ஒருவா் காயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக அஸ்வினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து பாதுகாப்பு ஊழியா்கள் விரைந்து செயல்பட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com