தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறையை அடுத்து சென்னையில் இருந்து 1200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
4,575 சிறப்புப் பேருந்துகளில் 2.05 லட்சம் பேர் பயணம்
4,575 சிறப்புப் பேருந்துகளில் 2.05 லட்சம் பேர் பயணம்


சென்னை: தொடர் விடுமுறையை அடுத்து சென்னையில் இருந்து 1200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் ஆண்டு பிறப்பையொட்டி நாளை 14 ஆம் தேதியும், நாளை மறுநாள் புனித வெள்ளியையொட்டி 15 ஆம் தேதியும் அரசு விடுமுறை நாளாக உள்ளது.  ஞாயிற்றுக்கிழமை(ஏப் 17) வார விடுமுறை என்பதால் சனிக்கிழமை (ஏப் 16) ஆம் தேதி மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சனிக்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இன்றும், நாளையும் (ஏப்.13,14)  1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.  

இதேபோல் பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வருவதற்கு வசதியாக பிற ஊர்களில் இருந்து ஏப்.17 ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com