

நீடாமங்கலம் சதுர்வேத வினாயகர் மகாமாரியம்மன் கோயிலில் 37ம் ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி புஷ்ப பல்லக்கு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மகாமாரியம்மனை தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம் தமிழ் இளைஞர்கள் பக்தர்கள் கழகத்தினர் நடத்தும் 37ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 25 ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் சதுர்வேத வினாயகர், மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்படுகிறது.
அம்மன் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. தமிழ்ப் புத்தாண்டான வியாழக்கிழமை புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இரவு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மகாமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை காலை தீர்த்தவாரி நடந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.