என்ன சொல்கின்றன சென்னையின் 15 மண்டலங்களும்?

சென்னையில் பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
என்ன சொல்கின்றன சென்னையின் 15 மண்டலங்களும்?

சென்னை: சென்னையில் பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

முகக்கவசம் உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தான் அமல்படுத்தப்பட்டன. 20 நாள்கள் ஆவதற்குள் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காரணம், ஏப்ரல் முதல் வாரத்துக்கு முன்பு வரை சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்துதான் வந்தது. 100க்கும் கீழ்தான் கரோனா நோயாளிகள் இருந்தனர். அரசு மாவட்ட மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளே இல்லாத நிலையும் உருவானது.

மக்களும் அடடா சென்னையை விட்டு கரோனா ஓடிவிட்டது என்று நிம்மதிபெருமூச்சு விட்டனர். ஆனால் என்ன செய்வது, நாம் நினைப்பது போலவே அனைத்தும் நடக்கிறதா என்ன? இல்லையே அதுபோலத்தான். ஒரு சின்ன யூ டர்ன் எடுத்து கரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

21 ஏப்.: 21
20 ஏப்.: 16
19 ஏப்.: 17
18 ஏப்.: 15
17 ஏப்.: 19
16 ஏப்.: 12
15 ஏப்.: 12
14 ஏப்.: 08
13 ஏப்.: 10
12 ஏப்.: 09
11 ஏப்.: 10

அதிகரித்திருக்கும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவு என்றாலும், குறைந்து வந்த போக்கு மாறி, அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாகும். 

அதாவது, ஏப்ரல் 18ஆம் தேதி சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 99 ஆக இருந்த நிலையில், அது 19ஆம் தேதி 103 ஆகவும், 20ஆம் தேதி 109 ஆகவும் அதிகரித்தது. படிப்படியாக அதிகரித்து ஏப்ரல் 22ஆம் தேதி காலை நிலவரப்படி 128 ஆக அதிகரித்துள்ளது.

தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களில்தான் இரட்டை இலக்கத்தில் பாதிப்பு இருந்தது. தற்போது இதில் கோடம்பாக்கமும் இணைந்துகொண்டது.

எனவே, மக்களே கரோனா ஓடிவிட்டது, ஒழிந்து விட்டது என்று நினைக்காமல், பொதுவிடங்களுக்குச் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்குச் செல்வதை தவிர்த்து விடலாம்.

மீண்டும் ஒரு பொதுமுடக்கம், தனிமைப்படுத்துதல் போன்றவற்றை தவிர்க்க நாமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைகொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com