திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிவகார்த்திகேயன் வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

சிவகார்த்திகேயனின் சம்பள பாக்கி விவகாரத்தில் தீர்வு காண மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பியது. 

News image
Updated On :25 ஏப்ரல் 2022, 2:33 pm

DIN

சிவகார்த்திகேயனின் சம்பள பாக்கி விவகாரத்தில் தீர்வு காண மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பியது. 

சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் சிவகாா்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில், எனது நடிப்பில் ‘மிஸ்டா் லோக்கல்’ படத்தைத் தயாரிப்பதற்காக, கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலையில் தயாரிப்பாளா் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதத்தில் படம் வெளியான நிலையில், இதுவரை ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, ரூ.4 கோடி பாக்கி வைத்துள்ளாா். 

ரூ.11 கோடிக்கான டிடிஎஸ் தொகையைப் பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால் கடந்த 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்ச ரூபாயை செலுத்த வேணடுமென எனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து முன்னரே வழக்கு தொடுத்துள்ளேன். எனவே, ரூ.4 கோடி சம்பள பாக்கியை எனக்கு செலுத்துவதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவதற்கும் தயாரிப்பாளா் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும். 

தொகை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ரிபெல்’, விக்ரம் நடிக்கும் ‘சீயான்61’, சிம்பு மற்றும் கௌதம் காா்த்திக் நடிக்கும் ‘பத்து தல’ ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க வெளியீடு, ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தாா். 

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பள பாக்கி விவகாரத்தில் தீர்வு காண மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பியது. மேலும் பிரச்னைக்கு தீர்வு காண சமரச தீர்வாளரை நியமித்த நீதிமன்றம் ஞானவேல்ராஜா தயாரிக்கும் 3 படங்களை வெளியிடத் தடை கோரிய சிவகார்த்திகேயனின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.