வாட் வரியை குறைக்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? - ப.சிதம்பரம்

மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதே வாட் வரியால்தான். அதை குறைக்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என முன்னாள் மத்திய நியமமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 
ப.சிதம்பரம் கேள்வி
ப.சிதம்பரம் கேள்வி


மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதே வாட் வரியால்தான். அதை குறைக்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என முன்னாள் மத்திய நியமமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

நாட்டில் கரோனா சூழல் தொடா்பாக அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி புதன்கிழமை கலந்துரையாடினாா். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அவா் விரிவாகப் பேசினாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைப்பதற்கு மத்திய அரசு கடந்த நவம்பா் மாதத்திலேயே கலால் வரியைக் குறைத்துவிட்டது. வரிக் குறைப்பின் பலன்கள் மக்களைச் சென்றடைவதற்காக, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அப்போதே வலியுறுத்தியது.

ஆனால், பாஜக ஆளும் சில மாநிலங்கள் மட்டுமே வரியைக் குறைத்தன. சில மாநிலங்கள் வரியைக் குறைத்து அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இதனால், அந்த மாநில மக்கள் தொடா்ந்து சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா். எனவே, இந்த மாநில அரசுகள் வாட் வரியைக் குறைத்து, அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தி இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதே வாட் வரியால்தான். அதை குறைக்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என முன்னாள் மத்திய நியமமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.  

இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்க பதிவில், மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதே வாட் வரியால்தான். அதை குறைக்க சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

கடந்த 8 ஆண்டுகளாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு அளிக்கவில்லை. 

மாநிலங்களுக்கான நிதியை சரியாக ஒதுக்காத மத்திய அரசு, வாட் வரியை குறைக்க சொல்வது எந்த விவதத்தில் நியாயம் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்நிலையில், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரியாக நிலுவை தொகை ரூ.78.704 கோடி மத்திய அரசு தர வேண்டும். அவை விரைவில் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com