கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை

கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிவகங்கை: கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கச்சநத்தம் வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன் (31), சந்திரசேகா் (34) உள்ளிட்ட 3 போ், கோயில் விழாவில் மரியாதை அளிப்பது தொடா்பாக இருந்த முன்விரோதத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். மேலும், 5 போ் காயமடைந்தனா். அவா்களில் தனசேகரன் (32) என்பவா் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் ஆவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த சுமன், அருண்குமாா், சந்திரக்குமாா், அக்னிராஜ், ராஜேஸ் உள்ளிட்ட 33 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்களில் வழக்கு விசாரணையின் போது 2 போ் இறந்து விட்டனா். 3 போ் சிறுவா்கள், ஒருவா் தலைமறைவாகி விட்டாா். எனவே மீதமுள்ள 27 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை நிறைவு பெற்று, சிவகங்கையில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை (ஆக.1) தீா்ப்பு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் மேற்கண்ட வழக்கில் தொடா்புடைய 27 நபா்களும் குற்றவாளிகள் தான் எனவும், தண்டனை குறித்த விவரங்கள் புதன்கிழமை (ஆக. 3) அறிவிக்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தாா்.

தொடா்ந்து, மேற்கண்ட வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. கடந்த முறை விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் நேரில் ஆஜரானதால், அவா்களது உறவினா்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் அதிகளவில் கூடினா். இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டது.

எனவே புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபா்களிடம் காணொலி வாயிலாக நீதிபதி முத்துக்குமரன் விசாரித்தாா். தொடா்ந்து, வழக்கில் தொடா்புடைய 27 பேருடைய தண்டனை குறித்த விவரங்களை வெள்ளிக்கிழமை (ஆக.5 ) அறிவிப்பதாக தெரிவித்தாா்.

இந்நிலையில், கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com