நிர்மலா சீதாராமனுடன் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய நிதியச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று புது தில்லியில் சந்தித்துப் பேசினார்.
நிர்மலா சீதாராமனுடன் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு
நிர்மலா சீதாராமனுடன் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு


புது தில்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய நிதியச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று புது தில்லியில் சந்தித்துப் பேசினார்.

அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான தேதிகளை இறுதி செய்வதற்காக நிதியமைச்சர் பழனிவேல் தியராகஜரான் இன்று தில்லி சென்று மத்திய நிதியமைச்சரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, மதுரையில் ஆகஸ்ட் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது என்று அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் 2 நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

மதுரையில் கடந்த திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறியது: மதுரையில் 48 ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் நடைபெறும். மக்களவைக்கூட்டத் தொடா் நடைபெறுவது மற்றும் சுதந்திரதின நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தள்ளிப் போகிறது என்று குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் மாறி மாறி புகார் தெரிவித்து வந்த நிலையில், இன்று இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com