
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான தமிழக வீரர் உள்பட 3 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜெளரி மாவட்டம் தர்ஹால் என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் உள்பட 3 பேர் பலியாகினர்.
மூவரில் ஒருவர் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் ஆவார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் தற்கொலைப்படைப் பயங்கரவாதிகளின் தாக்குதலை எதிர்கொண்டு மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 3 வீரர்கள் வீரமரணம் எய்திய நிகழ்வு மிகுந்த வேதனையளிக்கிறது.
இன்னுயிர் ஈந்து நாட்டைக் காத்த நாயகர்களுக்கு என் வீரவணக்கம்! அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்!’ எனத் தன இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், பலியான லட்சுமணனின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளா
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...