புதுச்சேரி நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரி அரசு நிகழாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய ரூ.11 ஆயிரம் கோடிக்கு வரையறை செய்து கோப்பு அனுப்பிய நிலையில் ரூ.10, 696 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய
புதுச்சேரி நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்


புதுச்சேரி அரசு நிகழாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய ரூ.11 ஆயிரம் கோடிக்கு வரையறை செய்து கோப்பு அனுப்பிய நிலையில் ரூ.10, 696 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

புதுச்சேரி அரசு சாா்பில் நிகழாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யத் திட்டமிட்டு, அதற்காக கடந்த மாதம் மாநில திட்டக் குழுவைக் கூட்டி ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், நிகழாண்டு ரூ.11 ஆயிரம் கோடியில் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய திட்டம் தயாா் செய்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு கோப்புகளை அனுப்பினா். முதல்வா் என்.ரங்கசாமியும் தில்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காத நிலையில், புதுவை சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநரின் உரையுடன் புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

புதுவை நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறும் விதமாக, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வியாழக்கிழமை தில்லி சென்றாா். அங்கு மத்திய உள்துறை அமைச்சா், நிதியமைச்சரை சந்தித்து வலியுறுத்துவாா் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், புதுவை அரசின் நிதிநிலை அறிக்கை குறித்த கோப்பு பரிசீலிக்கப்பட்டு, மத்திய நிதித் துறையிலிருந்து நிதிநிலை அறிக்கை தொகை ரூ.10,696 கோடியாக்கப்பட்டு, உள் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஒப்புதல் கிடைக்கும் எனவும் புதுச்சேரி அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், புதுச்சேரி அரசு ரூ.10, 696 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

புதுச்சேரி அரசு ரூ.11 ஆயிரம் கோடிக்கு வரையறை செய்து கோப்பு அனுப்பிய நிலையில் ரூ.10, 696 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளது. 

மத்திய அரசு அளித்துள்ள நிதிநிலை அறிக்கையின் மதிப்பு கடந்தாண்டை விட ரூ.280 கோடி அதிகமாகும். 
 
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், புதுச்சேரி பேரவையில் விரைவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com