
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 603 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 603 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,63,322-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்கலாம் | தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை இயற்ற வேண்டும்: ராமதாஸ்
தமிழகம் முழுவதும் ஆண்கள் 364 பேர், பெண்கள் 239 பேர் என 603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 90 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை 75, செங்கல்பட்டு 47 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை.
இன்று ஒரு நாளில் மட்டும் 743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,9,342-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,947 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.