தொழிலதிபர்கள் மட்டுமல்ல, தொழிலாளிகளும் வளரும் ஊர் திருப்பூர்: மு.க. ஸ்டாலின்

தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி, தொழிலாளிகள் வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொழிலதிபர்கள் மட்டுமல்ல, தொழிலாளிகளும் வளரும் ஊர் திருப்பூர்: மு.க. ஸ்டாலின்


திருப்பூர்: தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி, தொழிலாளிகள் வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருப்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசு மேற்கொண்டுள்ள 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.2 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் வளரும் ஊராக திருப்பூர் அமைந்துள்ளது. திருப்பூரில் நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 50 சதவீதம் ஏற்றுமதியாகிறது. 

தொழில்கள் சென்னை மற்றும் குறிப்பிட்ட மாநகரத்தை மட்டும் மையமாகக் கொண்டு அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com