எழும்பூர் கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு விழா: புதிய கட்டடம் திறப்பு

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200 ஆவது ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். 
எழும்பூர் கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு விழா: புதிய கட்டடம் திறப்பு

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200 ஆவது ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். 

இவ்விழாவில் சென்னை எழும்பூர் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் ரூ. 195 கோடி மதிப்பிலான மருத்துவக் கட்டடங்கள், நவீனக் கருவிகள், மருத்துவ ஊர்திகளின் சேவையை தொடங்கிவைத்தார். 

எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் ரூ. 65.60 கோடியில் புதிய கட்டடத்தை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், பின்னர் களப்பணி உதவியாளர், மருந்தாளுநர் உள்ளிட்ட 237 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். 

தொடர்ந்து, 26 மருத்துவமனைகளுக்கு மின்கல ஊர்தி சேவையை தொடங்கிவைத்தார். 

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com