
கோப்புப்படம்
ரயில் பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் உணவுகளை ஆர்டர் செய்யும் வசதியை ஐஆர்சிடிசி(IRCTC) அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் ரயில் பயணிகள் உணவுகளை வாட்ஸ் ஆப் மூலம் ஆர்டர் செய்தால், தங்கள் இருக்கைக்கு கொண்டுவந்து டெலிவரி செய்யும் வசதியை ஜூப் இந்தியா நிறுவனத்துடன் ஐஆர்சிடிசி இணைந்து அறிமுகம் செய்துள்ளது.
இது பயணிகளின் பின்ஆர் எண் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பயணிகள் வேறு எந்த ஆப்களைகளையும் பயன்படுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
Zoop இல் உணவை ஆர்டர் செய்வது எப்படி?
1. உணவை ஆர்டர் செய்ய, செய்ய வேண்டியது வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி +91 7042062070 என்ற எண்ணில் Zoop WhatsApp சாட்போட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அதில் சேவை விவரங்கள் வழங்கப்படும். எண்ணைச் சேமிக்கும் செயல்முறையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்றால், இணையதளம் ( https://wa.me/917042062070) பயன்படுத்தலாம்.
2. ரயில் இருக்கையில் உணவை ஆர்டர் செய்யும் செயல்முறையை செய்ய தேவையான விவரங்களை சாட்பாட் கேட்கும். உதாரணமாக, உங்கள் PNR எண்ணைப் பகிர வேண்டும். சாட்போட்டுடன் 10 இலக்க PNR எண்ணை பதிவிட வேண்டும். ஜூப் ரயிலின் இருக்கையை கண்டறியும். இதனையடுத்து உணவு டெலிவரி செய்யப்பட வரவிருக்கும் நிலையத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.
3. ஜூப் சாட்போட், உணவகத்தைத் தேர்ந்தெடுப்பது, உணவை ஆர்டர் செய்வது மற்றும் பணத்தை செலுத்துவது போன்ற அனைத்து செயல்பாடுகளையும் செய்யும். பரிவர்த்தனை முடிந்ததும், உங்கள் உணவு எங்கு உள்ளது என்று ஜூப் சாட்போட்டில் இருந்து கண்காணிக்கலாம். மேலும் தேர்ந்தெடுத்த ரயில் நிலையம் வரும்போது ஜூப் உணவை டெலிவரி செய்யும்.
இதையும் படிக்க: இந்தியாவில் 2030க்குள் 6ஜி சேவை: பிரதமர் மோடி அறிவிப்பு
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G