பேரவையில் அருணா ஜெகதீசன், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை

தமிழக சட்டப்பேரவையில் அருணா ஜெகதீசன், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைகளை வைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழக சட்டப்பேரவையில் அருணா ஜெகதீசன், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைகளை வைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆன்லைன் ரம்மி போன்ற சில இணையதள விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் கொண்டுவருவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு ஆய்வு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

இதேபோன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com