ஈரோடு பகுதியில் வீடுகளில் வெள்ளநீர்: மக்கள் கடும் அவதி, மின்னணு சாதனங்கள் சேதம்

ஈரோடு கருக்கம்பாளையம் காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை தண்ணீா் புகுந்ததால் வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் சேதமடைந்துள்ளன.
ஈரோடு பகுதியில் வீடுகளில் வெள்ளநீர்: மக்கள் கடும் அவதி, மின்னணு சாதனங்கள் சேதம்


ஈரோடு  46 புதூர், கருக்கம்பாளையம் காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை தண்ணீா் புகுந்ததால் வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் சேதமடைந்துள்ளன.

ஈரோடு கருக்கம்பாளையம் காலனி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழை தண்ணீா்.

ஈரோட்டில் கடந்த 4 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் அப்பகுதியில் செல்லும் பெரும் பள்ளம், வாய்க்கால் மற்றும் கீழ்பவானி கிளை வாய்க்கால்கள் பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் நிலையில் மழை நீரும் கலந்ததால் வாய்க்காலில் நீர் நிரம்பி வெள்ளம் வெளியேறியது.

வீடுகளுக்குள் புகுந்த மழை தண்ணீா்.

இதனால்  46 புதூர்,கருக்கம்பாளையம் காலனி பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை தண்ணீா் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனா். இதனால் வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் சேதமடைந்துள்ளன. 

பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறும் மக்கள். 

மழைநீர் வடிந்த பகுதியில் நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள்

மேலும், மூன்று நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும், வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் புகாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com