ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கொட்டி தீர்த்த கனமழையால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.
ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 9 மணியளவில் திடீரென கன மழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதியற்றனர். மேலும், பல்வேறு தெருக்களில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

வீடுகளில் புகுந்த மழை நீர்
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பல்வேறு வார்டுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் மருந்து, மாத்திரைகள் படுக்கைகளை எடுத்துக் கொண்டு வேறு இடம் நோக்கி ஓடினர். குறிப்பாக பெண்கள் வார்டில் மழை நீர் புகுந்ததால் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த உள் நோயாளிகள் அனைவரும் ஆண்கள் பிரிவில் தங்க வைக்கப்பட்டனர்.

தெருக்களில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
அதேபோல் ராசிபுரம் அருகே உள்ள தட்டான் குட்டை ஏரியில் நீர் நிரம்பி வழிந்து ஓடியது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ராசிபுரம் ஏரியில் மழை நீர் குளம் போல் தேங்கியது. ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு 200 மி.மீ அளவு மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்

நுவான் துஷாராவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

பாதுகாப்பு காரணம்! பிரபல அமெரிக்க பாடகரின் இந்திய பயணம் ரத்து!

எரிபொருள் விலை எதிரொலி: எண்ணெய் நிறுவனங்கள், பெயிண்ட் பங்குகள் சரிவு!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

