
சங்ககிரி நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 54.2 மில்லி மீட்டா் மழை பெய்தது.
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 54.2 மில்லி மீட்டா் மழை பெய்தது.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
சங்ககிரி நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் இரவு 8 மணி முதல் 9 மணி வரை கன மழை பெய்தது.
சங்ககிரி நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் குளிர்ந்த காற்றுடன் பெய்த மழை.
இதையும் படிக்க | ஆறுகுட்டிபோல் எல்லா குட்டிகளும் எங்களிடம் தான் உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
நகரின் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மழை பெய்து கொண்டிருந்த போது மின் தடை ஏற்பட்டது. இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): வியாழக்கிழமை இரவு 23 மில்லி மீட்டரும், வெள்ளிக்கிழமை இரவு 38.2 மில்லி மீட்டர் மழையும் பெய்தன. அதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 54.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...