சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த 220 கிலோ கஞ்சா
சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த 220 கிலோ கஞ்சா

இலங்கைக்கு கடத்த இருந்த 220 கிலோ கஞ்சா, பைபர் படகு பறிமுதல்: 3 பேர் கைது!

இலங்கைக்கு பைபர் படகு மூலம் கடத்தப்பட இருந்த 220 கிலோ கஞ்சா மற்றும் பைபர் படகை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட 3  பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கைக்கு பைபர் படகு மூலம் கடத்தப்பட இருந்த 220 கிலோ கஞ்சா மற்றும் பைபர் படகை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட 3  பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து நாகை கடல் வழியாக இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக நாகை சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சுங்கத்துறையினர், நாகை அருகே செருதூர் - வேளாங்கண்ணி இடையே செல்லும் வெள்ளை ஆற்றில் சோதனை மேற்கொண்டனர். அப்போது படகு ஒன்றிலிருந்து தப்பி ஓட முயன்றவர்களை போலீஸார் தடுத்து அதிரடியாக பிடித்தனர்.

படகை சோதனை செய்ததில் 9 மூட்டைகளில் 220 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.  பிடிப்பட்டவர்களிடம் நடத்திய விசாரனையில், நாகை மாவட்டம் புஷ்பவனத்தைச் சேர்ந்த அருள்அழகன், காஞ்சிநாதன், நாலுவேதபதியைச் சேர்ந்த வேணுகோபால் ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த விருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 220 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com