
சுப்ரமணியன் சுவாமி
சினிமா கலாசாரம் தமிழக பாஜகவை அழித்துவிட்டாக கூறியுள்ள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் நான் மட்டும்தான் திமுகவை எதிர்ப்பதுபோல் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் நான் மட்டும் தான் திமுகவுக்கு எதிர்க்கட்சி போல் தெரிகிறது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுமினால் பயந்து, பதுங்கும் பூனையாக பாஜக உள்ளது.
It seems in Tamil Nadu I am the only Opposition to DMK. TN BJP is full of pussy cats who only meow when Stalin growls. Cinema culture has ruined TN BJP
— Subramanian Swamy (@Swamy39) December 4, 2022
இதையும் படிக்க | லாலு பிரசாத்துக்கு அறுவை சிகிச்சை: விரைந்து நலம் பெற ஸ்டாலின் வாழ்த்து!
மேலும், சினிமா கலாசாரம் தமிழக பாஜகவை அழித்துவிட்டது என பாஜக மூத்த தலைவர் ஒருவரே விமர்சித்திருப்பது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.