அம்பேத்கருக்கு காவி உடை! இந்து மக்கள் கட்சியின் வைரல் போஸ்டர்!

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கருக்கு காவி உடை அணிந்து ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு நிலவியது. 
அம்பேத்கருக்கு காவி உடை! இந்து மக்கள் கட்சியின் வைரல் போஸ்டர்!
Published on
Updated on
1 min read

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கருக்கு காவி உடை அணிந்து ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு நிலவியது. 

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி இந்து மக்கள் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டி சமூல வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தின் பல பகுதிகளில் அம்பேத்கர் காவி உடை அணிந்தவாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி இந்து மக்கள் கட்சியினர் சார்பில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

அதில், அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து, நெற்றியில் பட்டையிட்டு காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம் என பதித்துள்ளனர். மேலும் சுவரொட்டியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் படமும் இடம்பெற்றுள்ளது. 

இந்து மக்கள் கட்சியின் இந்த செயலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, சனாதன பாகுபாடுகளை- பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10 லட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். 

சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை-குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.