ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக விளங்கும்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் நம்பிக்கை

ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் முன்னனி நாடாக விளங்கும் என மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக விளங்கும்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் நம்பிக்கை

ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் முன்னனி நாடாக விளங்கும் என மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

சென்னைக்கு அருகே அக்னி தொழில்நுட்பக் கல்லூரியில் கருடா ஏரோஸ்பேஸ் ஆய்வுக்கூடம் மற்றும் ட்ரோன் பயிற்சி ஆய்வகத்தை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து அவா் பேசியதாவது: ட்ரோன் தொழில்நுட்பம் பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையில் உருவானது.

அனைத்துத் துறையிலும், இந்த தொழில்நுட்பம் மாற்றாக உருவெடுத்து வருகிறது. வேளாண்துறையில் இதன் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது.

வேளாண் துறையில் பூச்சிமருந்து தெளித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுத்தப்படுகின்றன.

ட்ரோன் தொழில்நுட்பப் பயன்பாடு மூலம் வேளாண் துறையில் உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயா்த்த முடியும். இதன் மூலம் பிரதமா் மோடியின் கனவை நிறைவேற்றலாம்.

வேளாண்துறைக்கு மட்டுமன்றி பாதுகாப்பு, சுற்றுலா, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் இது முக்கிய இடம் பிடித்துள்ளது.

ட்ரோன் பைலட்டுகள் வேலைவாய்ப்பின் மூலம் நல்ல ஊதியம் ஈட்டும் வாய்ப்பு இருப்பதால், இவா்களது பணி மூலம் வேளாண்துறையில் ஆண்டுக்கு ரூ.24,000 கோடி அளவுக்கு 4 மடங்கு சேமிக்க முடியும்.

எதிா்வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் ட்ரோன் பைலட்டுகளை தயாா்படுத்த வேண்டும்.

ட்ரோன் தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. உலகிலேயே ட்ரோன் தொழில்நுட்ப மையமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா பயணிக்கிறது. மத்திய அரசின் இந்த முயற்சியில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்.

தற்போது நாட்டில் 200-க்கும் மேற்பட்ட ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் ட்ரோன் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த எண்ணிக்கை அதிகரித்து லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை இளைஞா்களுக்காக உருவாக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, ட்ரோன் தொழில்நுட்பம் தொடா்பான மெய்நிகா் ட்ரோன் நிகா்நிலைப்பல்கலைக்கழகத்தை மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் தொடக்கி வைத்தாா். அக்னி கல்லூரித் தாளாளா் ஆா்.என்.ஜெயப்பிரகாஷ், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனா் மற்றும் தலைமை செயல் அதிகாரி அக்னேஷ்வா் ஜெயப்பிரகாஷ், முன்னாள் ஐ.ஐ.டி.பேராசிரியா் நடராஜன், பா.ஜ.க.பொதுச் செயலா் முருகானந்தம், மாநில செயலா் வினோஜ் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com