மாண்டஸ் புயலின் நகரும் வேகம் தொடர்ந்து குறைந்து வருவதால், கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் வலுப்பெற்றது. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்த தாழ்வு மண்டலம் நேற்று மாலையே புயலாக மாறும் என கணிக்கப்பட்ட நிலையில், நகரும் வேகம் குறைந்ததால் புயலாக வலுபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது புயலின் நகரும் வேகமானது மணிக்கு 6 கி.மீட்டராக குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது காரைக்காலுக்கு 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 620 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இதனால், நாளை(டிச.9) இரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை நள்ளிரவு ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடதமிழகம், புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் இந்த முறையும் கூட்டணிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி 8 தொகுதிகளில் அதிமுக போட்டி!

தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும்! வானதி சீனிவாசன்

சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள செவிலியர்: ராகுல் நெகிழ்ச்சி

பழனியில் 3 நாள்களுக்கு கட்டண தரிசனம் ரத்து!
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

