நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடலுக்கு திரளானோர் அஞ்சலி

உடல்நலக்குறைவால் காலமான திரைப்பட நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடலுக்கு திரளானோர் அஞ்சலி
Updated on
1 min read

தஞ்சாவூர்: உடல்நலக்குறைவால் காலமான திரைப்பட நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவ நாராயணமூர்த்தி 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் கிருபானந்த வாரியாரின் சிஷ்யராக இருந்துள்ளார்.

ஆரம்ப காலகட்டங்களில் விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்று, முதன்முதலாக நகைச்சுவை பேச்சால் தனது திறமையை வெளிப்படுத்தி விசுவால் 'பூந்தோட்டம்' என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதன்பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 

நடிகர் சிவநாராயண மூர்த்தி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சினிமாவில் இருந்து விலகி வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று(புதன்கிழமை) இரவு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது உடல் பட்டுக்கோட்டை பொன்னவராயன் கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பட கலைஞர்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் வந்து  அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று பகல் 12 மணிக்கு நடைபெறுவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com