மாண்டஸ் புயல் தீவிரம்: விழுப்புரம் மாவட்டத்திற்கு அவசர கால தொடர்பு எண்கள் அறிவிப்பு! 

மாண்டஸ் புயல் காரணமாக, புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்துச்செல்லப்பட்டதால் பரபரப்பு நிலவியது. 
மாண்டஸ் புயல் தீவிரம்: விழுப்புரம் மாவட்டத்திற்கு அவசர கால தொடர்பு எண்கள் அறிவிப்பு! 

விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயலையொட்டி, புயல், பலத்த மழையை எதிா்கொள்ளும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து வட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாண்டஸ் புயல் காரணமாக, மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் வியாழக்கிழமை கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மீனவா்கள் தங்களது மீன் பிடி படகுகள், வலைகள், உபகரணங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனா்.

மாவட்டத்தை பொறுத்தவரை, 40 கி.மீ. கடலோரப் பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் 19 மீனவக் கிராமங்கள் அமைந்துள்ளன. கடலோரப் பகுதிகளில் அதிகப்படியான பாதிப்புகள் இருக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதை எதிா்கொள்ளும் வகையில், 12 புயல் நிவாரண மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், புயல் தொடா்பான எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் அளிக்கவும், மையங்கள் தயாா் நிலையில் இருப்பதையும் உறுதி செய்துள்ளோம். இது மட்டுமல்லாமல், மாவட்டத்தில் 1091 தற்காலிக நிவாரண மையங்களும் தயாா் நிலையில் உள்ளன.

விழுப்புரம் மாவட்டத்துக்கு தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினா் வந்துள்ளனா். இந்தக் குழுவில் 40 வீரா்கள் பணியில் உள்ளனா். துணை ஆட்சியா் நிலையில் ஒவ்வொரு வட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலா்களும் பணியிலிருந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல், மழை பாதிப்புகள், புகாா்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையில் ஊரக வளா்ச்சி, காவல், வருவாய்த் துறை அலுவலா்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். 

இங்கு செயல்பட்டுவரும் இலவச அழைப்பு எண் 1077, புகாா் தொலைபேசி எண் 04146 - 223265, வாட்ஸ்அப் எண் 7200151144 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கும்பட்சத்தில், உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

புயல், மழை காரணமாக செஞ்சி நகரில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், பொதுமக்கள் புகாா் தெரிவிக்க 9444244489 என்ற வாட்ஸ்ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் மாவட்ட ஆட்சியர் 944413800, 04146 - 222450, மாவட்ட வருவாய் அலுவர் - 9445000906, 04146-222128, நேர்முக உதவியாளர்(பொது) - 9445008160, 04146 - 222656, திட்ட இயக்குநர்(ஊரக வளர்ச்தி முகாம்) - 9445034240, 04146-223432, திட்ட அலுவலர்(குழந்தைகள் வளர்ச்சி) - 8939620271, 04146 - 224719, நேர்முக உதவியாளர்(கணக்குகள்) - 04146 - 223264, மாவட்ட மேலாளர் (தாட்கோ) - 9445029485, 04146-222863, துணைஇயக்குநர்(சுரங்கங்கள்) - 9444065339, 04146-222287, தனி வட்டாட்சியர், திருவெண்ணெய்நல்லூர் - 04153-290893, கண்டாச்சிபுரம் - 04153-231666, மேல்மலையனூர் - 9442763730, 04145-234210, மரக்காணம் - 9445461916, 04247-239449, விக்கிரவாண்டி - 04146-223132, செஞ்சி - 9445000206, 04145-222007, திண்டிவனம் - 9445000207, 04147-222090, வானூர் - 9445000208, 0413-2677391, விழுப்புரம் - 9445000201, 04146-222554.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com