15 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகரம் லக்ஷ்மி நாராயண பெருமாள் மகா கும்பாபிஷேகம்

தென்னக அயோத்தி என்று போற்றப்படும் புத்தகரம் லக்ஷ்மி நாராயண பெருமாள், சீதா லக்ஷ்மி ராமர் ஆலய மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகரம் லக்ஷ்மி நாராயண பெருமாள் மகா கும்பாபிஷேகம்

தென்னக அயோத்தி என்று போற்றப்படும் புத்தகரம் லக்ஷ்மி நாராயண பெருமாள், சீதா லக்ஷ்மி ராமர் ஆலய மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா புத்தகரம் கிராமத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் சீதா லக்ஷ்மண அனுமத் ராமர் ஆலயம் அமைந்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருந்தது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்யப்பட்டு, இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று பூமி பூஜை, வாஸ்து பூஜையுடன் காவிரியில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு யாகசாலை பிரவேசம், கும்பலங்காரம், மண்டலங்காரம், பிம்பலங்காரம் ஆகியவற்றுடன் யாகசாலை முதல் கால யாகபூஜைகள் தொடங்கியது, 2ம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹதியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் நடைபெற்றது.

அதனையடுத்து, விமான கலசத்திற்கு பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com