என்.கே.நடராஜன் மறைவு: மாா்க்சிஸ்ட் கம்யூ. சாா்பில் மரியாதை!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட்(மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாநிலச் செயலா் என்.கே.நடராஜன் உடலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா். 
மறைந்த என்.கே.நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.
மறைந்த என்.கே.நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.
Updated on
1 min read

திண்டுக்கல்: மறைந்த இந்திய கம்யூனிஸ்ட்(மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாநிலச் செயலா் என்.கே.நடராஜன் உடலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா். 

இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாநில செயலா் தோழா் என்.கே.நடராஜன் (68). திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்றபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தாா். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அரசபிளைப்பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினா் என்.பாண்டி, மாவட்டச் செயலா் இரா.சச்சிதானந்தம் உள்ளிட்டோா் மறைந்த என்.கே.நடராஜன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா். 

பின்னா் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், என்.கே.நடராஜன், கல்லூரி காலத்திலேயே மார்க்சியத்தின்பால் ஈடுபாட்டுடன் இருந்தவர். சாருமஜூம்தார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு தன்னை சிபிஐ(எம்-எல்) விடுதலை கட்சியில் இணைத்துக் கொண்டவர். 1980-களில் கட்சியின் முழுநேர ஊழியராக ஆன அவர், நீலகிரியில் உள்ள மலைவாழ் மக்களுக்காக போராடியவர். கோவை மாவட்ட ஆலைத் தொழிலாளர்களையும் மற்றும் குமாரப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து சங்கமாக்கி பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

2019 இல் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அவர், 2022 இல் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டிலும் மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இடதுசாரி ஒற்றுமையை கட்டுவதில் முக்கிய பங்காற்றியவர். இடதுசாரி கட்சிகள் சார்பில் கூட்டு இயக்கங்கள் நடத்துகிறபொழுது, தவறாமல் அதற்கான கூட்டங்களில் கலந்து கொள்வதுடன், மாநிலம் முழுவதும் அவரது கட்சித் தோழர்களை கலந்து கொள்ளச் செய்வார். அவரது மறைவு இடதுசாரி இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.

அவரது இழப்பால் வாடும் அவரது மனைவி, மகன், மகள், கட்சி தோழர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com