ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதை தொடர்ந்து இன்று அந்நீர் தேக்கத்தின் இருப்பு நிலை மற்றும் மிகை நீர் வெளியேற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடாந்து பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், நீர்ப்பிடிப்பு பகுதியான காவேரிபாக்கத்திலிருந்தும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் முழுவதும் பெய்து வரும் மழைநீர் அனைத்தும் இந்த நீர்தேக்கத்திற்குதான் வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகமாக மழை பெய்த காரணத்தினால் இன்றைக்கு ஏராளமான தண்ணீர் இங்கு வர ஆரம்பித்துள்ளது. 
முன்பெல்லாம் மழை பெய்தால் ஆங்காங்கே ஏரிகளில் தங்கி விடும். ஆனால் இப்பொழுது எல்லாம் ஏரிகளும் நிரம்பி உள்ள காரணத்தால் அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் ஓடுகிறது. எனவே பெய்து வரும் மழை தண்ணீர் அதனுடைய போக்கிற்கு ஏற்றாற் போல் செல்கிறது. அந்த போக்கிற்கு ஏற்றாற் போல் தண்ணீர் தடுத்து நிறுத்தி திறந்து விடப்படுகிறது. 
எனவே, தமிழ்நாட்டில் ஆறுகள், ஏரிகள், கன்மாய்கள் ஆகிய நீர் தேக்கங்களில் தண்ணீர் அதிகமாக செல்வதால். ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து புழல் நீர்த்தேக்கத்தை நீர்வளத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com