வேளுக்குடி அங்காளம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்!

தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீகயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
கும்பாபிஷேக விழாவில், பங்கேற்று சாமி தரிசனம் செய்த 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
கும்பாபிஷேக விழாவில், பங்கேற்று சாமி தரிசனம் செய்த 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

கூத்தாநல்லூர்:  திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த வேளுக்குடி அங்காளப் பரமேஸ்வரி கோயிலில், தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீகயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

சிவபெருமானின் மாமனாரும்,பார்வதி தேவியின் தந்தையுமான தச்சன் யாகம் செய்த வேள்விக்குடி என்ற வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயிலான அங்காள பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், அங்காள பரமேஸ்வரி அம்பாளாக எழுந்தருளியுள்ளார். பழமையான இக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்துக்காக, புதன்கிழமை (டிச.7) மஹா கணபதி ஹோமம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான யாகசாலை மண்டபத்தில், சுந்தரமூர்த்தி சிவாச்சாரியர், கணேஷ் குருக்கள், ஷண்முகம் குருக்கள் ஆகியோர் தலைமையில், கணபதி பூஜை, நவக்கிரஹ ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம் மற்றும் கிராம சாந்தி பூஜைகள் நடைபெற்றது. 

ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான விமானக் கலசங்களில் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டன. 

கோயில் அருகே ஓடக்கூடிய வெள்ளை யாற்றில் புனித நீர் கடங்கள் புறப்பாடாகி மற்றும் பரம்பரை பூசாரியார் ரமேஷ்குமார், ராஜீ, சரபோஜி, சதீஸ் சங்கர் மற்றும் தியாகு என்ற கோபாலசுவாமி மற்றும் பக்தர்களுடன் விமானக் கலசங்களும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, ஆகமவிதிப்படி கோயில் விமானத்தில் பொருத்தப்பட்டன. 

ஞாயிற்றுக்கிழமை காலை யாக பூஜைகளுடன், 9 மணிக்கு மஹா பூர்ணாஹூதி செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யாகசாலை மண்டபத்திலிருந்து, கடம் என்று சொல்லக் கூடிய புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி, மேள வாத்தியங்கள் முழங்க, கோயிலைச் சுற்றி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. 9.50 மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான விமானக் கலசங்களில் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டன. 

யாகசாலை மண்டபத்திலிருந்து, மேள வாத்தியங்கள் முழங்க, புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி, கோயிலைச் சுற்றி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மூலவர் அங்காளம்மன் மற்றும் பெரியாச்சி, தாட்சாயிணி அகோர வீரபத்திரர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டன. 

கும்பாபிஷேக விழாவில், பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

கும்பாபிஷேக விழாவில், 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தொழிலதிபர்கள் வி.கே.எஸ். அருள், கவிதா ஸ்வீட்ஸ் மோகன், இளைஞர் நீதி குழும உறுப்பினர் ப.முருகையன், தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர் மற்றும்  திருவாரூர், மன்னார்குடி, தஞ்சை, திருச்சி, சென்னை உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.  

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் உத்தரவின்படி, திருவாரூர், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் போலீஸார் பாதுக்காப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.

பின்னா், இரவு 7 மணிக்கு அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை, வேளுக்குடி ஸ்ரீலஸ்ரீ சடையப்ப பரம்பரை பூசாரியார் வி.எஸ்.ரமேஷ்குமார், வி.எஸ்.ராஜு மற்றும் கோயில் நிர்வாகக் குழுவினர்கள், மருளாளிகள், கிராமவாசிகள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com