
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலமாக 136 கட்டணமில்லா சேனல்கள், 82 கட்டண சேனல்கள் என மொத்தம் 218 சேனல்களை ரூ.140 மற்றும் ஜிஎஸ்டி தொகையுடன் சேர்த்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த நவம்பர் 19 அன்று ஒளிபரப்பு சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ஒளிபரப்பு சேவைகள் நடைபெற்று வருகிறது.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இன்று விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எதிர்கால செயல்திட்டம் குறித்து கேட்டறிந்து, வணிக திட்டங்களை விரைந்து செயல்படுத்திட அறிவுறுத்தினார்.
படிக்க: நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுகிறீர்களா?
மேலும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை வழங்குவது குறித்தும், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களான VOD, OTT, IPTV வழங்கக் கூடிய HD செட்டாப் பாக்ஸ்களை அடுத்த ஆறு மாத காலங்களில் வழங்குவது மற்றும் TACTV OTT APP உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்ட்டது.
எதிர்வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மேலும் அதிக சந்தாதாரர்களைச் சேர்த்து, ஒரு முன்னோடி வர்த்தக நிறுவனமாக செயல்படவும் ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் இறையன்பு கூடுதல் நிதித்துறை செயலாளர் முருகானந்தம், தமிழக தகவல் தொழில்நுட்பதுறை செயலாளர் நீரஜ் மித்தல் ஆகியோர் கலந்துகொண்டனர்.