
கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் பலத்த மழையால் செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை (டிச.13) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க.. மாறுவேடத்தில் சென்ற போலீஸ்; மருத்துவக் கல்லூரி ராகிங் வழக்கின் ஆச்சரிய பின்னணி
இந்த நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, வடக்கு கேரளம் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 26 மாவட்டங்களில் திங்கள்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
திருவள்ளூரில் பெய்த மழையால் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளித்தும் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உத்தரவிட்டாா். இதேபோன்று, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிா்வாகங்கள் உத்தரவிட்டன.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.