
அமைச்சர் உதயநிதி தனது அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
முதல்வர் கோப்பை மாநில கபடி போட்டிக்கு ரூ.47 கோடி ஒதுக்கும் கோப்பில் அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார். மேலும், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கவும், வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு தலா ரூ.6000 உதவித்தொகை வழங்கவும் அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார்.
இதையும் படிக்க: பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயில் தேர் வெள்ளோட்டம்
அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணத்துடன், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார்.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் வரிசையில் தங்கம் தென்னரசுவுக்கு அடுத்ததாக 10-வது இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.